சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்த கோச்சடையான் திரைப்படம் குறித்து ஓரளவுக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்திருக்கும் வேளையில் கோலிவுட் நட்சத்திரங்களும் கோச்சடையான் திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
நேற்று ரஜினியின் நெருங்கிய நண்பரான கமல்ஹாசன் கோச்சடையான் திரைப்படத்தை பார்த்துவிட்டு, இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர்களை வெகுவாக பாராட்டினார்.
இந்நிலையில் கோச்சடையான் திரைப்படம் குறித்து சிம்பு தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. கோச்சடையான் திரைப்படத்தின் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் பணிகள் ஹாலிவுட் தரத்தில் இல்லை என்றும் ஹாலிவுட் படத்துடன் கோச்சடையான ஒப்பிட்டு பார்க்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் திரைக்கதை மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் பணி சிறப்பாக உள்ளதென்றும், எடிட்டர் அந்தோணியின் பணி படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பதாக உள்ளது என்றும் சிம்பு கூறியுள்ளார்.
எதையும் ஓபன் டைப்பாக பேசும் சிம்பு, கோச்சடையான் திரைப்படத்தில் கிராபிக்ஸ் பணிகள் சரியில்லை என்று கூறியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனாலும் சிம்புவின் சர்ச்சை கருத்துக்கு செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.