2 தலைகளுடன் பிறந்த அபூர்வ குழந்தை. 19 நாள் போராட்டத்திற்கு பின்னர் இன்று உயிரிழந்தது.

[carousel ids=”34509,34510,34511,34512,34513,34514,34515″]

ஆஸ்திரேலியாவில் கடந்த 8ஆம் தேதி இரண்டு தலை மற்றும் ஒரே உடலுடன் பிறந்த பெண் குழந்தை ஒன்று 19 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் இன்று பரிதாபமாக உயிரிழந்தது.

ஆஸ்திரேலியாவில் ரேணி யங் மற்றும் சைமன் ஹோவி  என்ற தம்பதியினர்களுக்கு கடந்த 8ஆம் தேதி ஒரு வித்தியாசமான குழந்தை பிறந்தது. ஒரே உடலுடன் இரண்டு தலைகள் கொண்ட அந்த பெண் குழந்தை, உயிருக்கு இதுவரை போராடி வந்தது.

ஆஸ்திரேலிய மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாற்ற முயன்றனர். இரண்டு தலைகளிலும் இரண்டு மூளைகள் கொண்ட அந்த குழந்தை இன்று பரிதாபமாக உயிரிழந்தது.

மிகச்சில நேரங்களில் மட்டும் குழந்தை தனது நான்கு கண்களால் விழித்து தன்னை பார்க்கும் என்றும், குழந்தையின் தாயார் கண்ணீருடன் தெரிவித்தார். உலகில் இதுவரை இதுபோன்ற குறையுடன் 40 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளது என்றும், அவற்றில் இந்த குழந்தையும் ஒன்று என்றும் ஆஸ்திரேலிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1th25TW” standard=”http://www.youtube.com/v/O_lLouUFtmE?fs=1″ vars=”ytid=O_lLouUFtmE&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep7027″ /]

Leave a Reply