ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: சென்னை, கொல்கத்தா அணிகள் வெற்றி.

12நேற்று சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையே நடந்த வெளியேறும் போட்டியில் சென்னை அணி மும்பை அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இரண்டாவது தகுதிபோட்டிக்கு தகுதி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 173 ரன்கள் அடித்தனர். பின்னர் விளையாடிய சென்னை அணி 18.4 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 54 ரன்கள் எடுத்த ரெய்னா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்கோர் விபரம்:

மும்பை அணி:

சிம்மன்ஸ்        67
ஹஸ்ஸி        39
ஆண்டர்சன்    20
ரோஹித்        20
போலார்டு    14
ராயுடு        2
தாரே        0
ஹர்பஜசிங்    7
குமார்        1
ஓஜா        1

உதிரிகள்ஃ    25
மொத்தம்        173

சென்னை அணி:

ஸ்மித்        24
டீபிளஸ்ஸிஸ்    35
ரெய்னா        54
மெக்கல்லம்    14
ஹஸ்ஸி        40
உதிரிகள்        9

மொத்தம்        176    

முன்னதாக நேற்று நடந்த மற்றொரு போட்டியான பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான முதலாவது தகுதி போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

ஸ்கோர் விபரம் :

கொல்கத்தா அணி         : 163/8  20 ஒவர்கள்

பஞ்சாப் அணி    “        : 135/8 20 ஓவர்கள்
ஆட்டநாயகன் யாதவ் (கொல்கத்தா)   

Leave a Reply