இந்தியாவின் மிகப்பெரிய டிவி நெட்வொர்க நிறுவனமான சி.என்.என். – ஐ.பி.என் தொலைக்கட்சி நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.4000 கோடி கொடுத்து விரைவில் கைப்பற்ற உள்ளது. இந்திய மீடியா உலகில் மிகப்பெரிய பரிமாற்றமாக இந்த வர்த்தகம் கூறப்படுகிறது.
சி.என்.என். மற்றும் ஐ.பி.என், ஐ.பி.என் 7, லோக்மாத், சி.என்.பி.சி டிவி ஆகிய செய்தி சேனல்களும், கலர் என்ற சினிமா சேனலும் நெட்வொர்க்18 என்ற பெயரின் கீழ் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த குழுமத்தின் 78% பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சி.என்.என் கைமாற இருப்பதால் அதில் பணிபுரியும் சீனியர் செய்தி ஆசிரியர்கள் அனைவரும் வேறு ஊடகங்களுக்கு தங்கள் பணியை மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளனர். தலைமை செய்தி ஆசிரியர் ராஜ்திப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ராஜினாமா செய்ய உள்ளனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே தென்னிந்தியாவில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பல சேனல்களை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.