விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி (திவ்யதர்ஷினி) க்கு திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது. தனது நீண்ட நாள் நண்பரும், இயக்குனர் கவுதம் மேனனின் உதவி இயக்குனருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை திருமணம் செய்ய உள்ளார்.
ஐந்து ஆண்டுகளாக இருவரும் நண்பர்களாக பழகி வருவதாகவும், இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் வரும் ஜூன் மாதம் சென்னையில் திருமணம் செய்ய உள்ளதாகவும் டிடி கூறியுள்ளார்.
தனது நெருங்கிய நண்பரே தனக்கு லைஃப் பார்ட்னராக வந்ததில் தான் மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளதாக கூறிய டிடி, ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் மிக விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மிகவும் ஜாலியான பழகுவதற்கு இனிமாயனவர் என்று ஸ்ரீகாந்தை பற்றி கூறும் டிடி, தங்கள் இருவருக்கும் விஜய் டிவியின் அனைத்து ரசிகர்களின் ஆசிர்வாதம் வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.