கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை அடைந்தது. அனைத்து மாநிலங்களிலும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியால் வெறும் 45 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸின் படுதோல்விக்கு நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரமே காரணம் என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் 35 மாவட்டத் தலைவர்கள், 19 மாநிலப் பொதுச்செயலாளர்கள், 9 மாநில துணைத் தலைவர்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து நேற்று கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானசேகரன் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் தோல்விக்கு காரணமான ப.சிதம்பரத்தை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
ப.சிதம்பரத்தின் தவறான பொருளாதார கொள்கை காரணமாகத்தான் காங்கிரஸ் தமிழகத்தில் 38 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. காங்கிரஸின் வாக்கு வங்கியும் 4.3 சதவீதமாக சரிந்தது. எனவே இதற்கு பொறுப்பேற்று ப.சிதம்பரமும், ஞானசேகரனும் கட்சியில் கட்சியில் இருந்து விலகவேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.