இந்திய ரிசர்வ் வங்கி புதிய 1,000 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிட உள்ளது. இந்த தகவலை ரிசர்வ் வங்கியின் கவர்னர் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி படத்துடன் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி கவர்னர், அவ்வாறு வெளியிடப்படும் புதிய நோட்டுக்களில் ரூபாயின் புதிய சின்னமும், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்தும் இடம்பெற்று இருக்கும் என்றார்.
பின்பக்கத்தில் 2014 ஆண்டு என்ற எண் அச்சிடப்பட்டு இருக்கும். மகாத்மா காந்தி என்ற பெயருக்குரிய எழுத்துக்கள் இடம்பெற்று இருக்காது. இப்போது புழக்கத்தில் உள்ள ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவிலேயே புதிய நோட்டுகளும் இருக்கும்.
இதற்கு முன் வெளியிடப்பட்டுள்ள ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் வழக்கம்போல் புழக்கத்தில் இருக்கும்.
ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் போலவே புதிய 50, 20, ஆகிய ரூபாய் நோட்டுக்களும் வெளியிடப்படவுள்ளன. மேலும், 50 ரூபாய் நோட்டுகளுக்கு முன் ரிசர்வ் வங்கியை குறிக்கும் ஆர் என்ற எழுத்து இடம்பெற்று இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.