இன்று முதல் பள்ளிகள் ஆரம்பம். முதல் நாளிலேயே சீருடை, புத்தகம் கொடுக்க முதல்வர் உத்தரவு.

9தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவ மாணவிகள் உற்சாகமாக அடுத்த வகுப்பிற்கு இன்றுமுதல் பள்ளிக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

தமிழக பள்ளிகளில் ஒருமாத காலம் கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதால் இன்றே அனைவருக்கும் அவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 1 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காகமொத்தம் 4 கோடியே 20 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அவற்றை விநியோகம் செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  1 முதல் 9ஆம் வகுப்பு வரை முதல் பருவத்திற்கு என 2 கோடியே 20 லட்சம் புத்தகங்களும், 10 வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய மாணவர்களுக்கு 2 கோடி புத்தகங்களும் ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில், அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளோடு, ஜாமெண்டரி பாக்ஸ், ஸ்கூல் பேக், செருப்பு உள்ளிட்ட பொருட்கள் ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன.. மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படுவதை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளி கல்வி இணை இயக்குனர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

Leave a Reply