ரஜினிகாந்த், அனுஷ்கா நடித்து வரும் லிங்கா திரைப்படத்தின் தெலுங்கு உரிமை ரூ.30 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்ப்படம் ஒன்றின் டப்பிங் உரிமை இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர்கள் தெலுங்கிலும் பிரபலமாக இருப்பதால் இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முன்வந்துள்ளனர்.
ரூ.30 கோடிக்கு தெலுங்கு விற்பனை ஆனதை தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உறுதிப்படுத்தியிருந்தாலும் தெலுங்கு உரிமையை பெற்ற நிறுவனம் குறித்து அவர் எவ்வித தகவல்களும் தெரிவிக்கவிலை. இந்த படத்தின் முதல்கட்ட படபிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் தீபாவளி அன்று “லிங்கா” வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.