ராகுல்காந்தியின் பதவியைப் பிடித்த மல்லிகார்ஜுனே கார்கே. காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி.

 

9மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுனே கார்கே நியமிக்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று டெல்லியில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த பதவியை ராகுல்காந்திதான் பெறுவார் என காங்கிரசார் அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென சோனியா காந்தியின் இந்த அறிவிப்பு காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சியுற செய்துள்ளது.

 ஒருவேளை காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை சபாநாயகர் கொடுக்க முன்வந்தால் மல்லிகார்ஜுனே கார்கேதான் எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவதற்கு நாடாளுமன்றத்தின் மொத்த தொகுதிகளில் 10% தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதாவது குறைந்தது 54 தொகுதிகளை தக்க வைத்திருந்க்க வேண்டும். ஆனால் தற்போது காங்கிரசிடம் வெறும் 44 எம்.பிக்கள் மட்டுமே உள்ளனர்.

 கர்நாடக மாநிலத்தின் குல்பர்கா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுனே கார்கே, 71 வயது நிரம்பியவர். காங்கிரஸ் கட்சியிலும், மத்திய அரசிலும் பல பதவிகளை வகித்தவர். தன்னை மக்களவை தலைவராக நியமனம் செய்த சோனியா காந்திக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ள மல்லிகார்ஜுனே, மோடி அரசு செய்யும் தவறுகளை மக்களவையில் தைரியமாக சுட்டிக்காட்ட சோனியா தனக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கியுள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்

Leave a Reply