ஜெயலலிதா கடிதம் எழுதிய 24 மணி நேரத்தில் தமிழக மீனவர்கள் விடுதலை. ராஜபக்சே உத்தரவு.

mahinda_jeyநேற்று முன் தினம் தமிழகத்தை சேர்ந்த 29 மீனவர்கள் இலங்கை கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டு இலங்கையில் உள்ள தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் ஜூன் 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரதமர் மோடிக்கு தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதினார். கடிதம் எழுதிய 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட 29 பேர்களையும் விடுதலை செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழக மக்களும், மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 29 மீனவர்களும் இன்று மாலைக்குள் இந்தியா திரும்புவார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்திக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply