செளந்தர்யா ரஜினிகாந்த் போன்று ஒரு மந்தமான பெண்ணை நான் பார்த்ததே இல்லை.பிரபல இயக்குனர் ஆவேசம்

soundarya-rajinikanthரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்த கோச்சடையான் படத்தை ஒருவழியாக ரிலீஸ் செய்து ஓரளவுக்கு நல்ல பெயரை பெற்றுவிட்ட நிம்மதியில் இருக்கும் செளந்தர்யா ரஜினிகாந்த் மீது தற்போது திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்று ஏற்பட்டுள்ளது.

செளந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தின் வேலைகளுக்கு இடையே, கன்னட படம் ஒன்றின் அனிமேஷன் வேலைகளை செய்து தருவதாக ஒப்புக்கொண்டிருந்தார். மாட்டே முங்காரு என்ற அந்த படத்தின் முக்கிய அம்சமே அதில் இடம்பெறும் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள்தான். இந்த படத்தின் இயக்குனர் ராகவா துவார்கி படத்தின் அனிமேஷன் வேலைகளை செளந்தர்யா ரஜினிகாந்த் அவர்களிடம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கொடுத்திருந்தார். மூன்று மாதங்களில் பணிகளை முடித்து தருவதாக வாக்குறுதி கொடுத்திருந்த செளந்தர்யா, இதுவரை பாதி வேலைகளைகூட முடிக்காமல் இழுத்தடித்து வருகிறார்.

இதனால் மாட்டே முங்காரு படத்தின் ரிலீஸ் தேதியை பலமுறை ஒத்திவைத்துவிட்ட இயக்குனர் ராகவா, தற்போது வெளிப்படையாகவே ஊடகங்களுக்கு இதுகுறித்து பேட்டியளித்துள்ளார். செளந்தர்யா போன்று மந்தமான, மட்டமான ஒரு கலைஞரை நான் பார்த்ததே இல்லை. அவரால் எனக்கு பலகோடி நஷ்டமாகிவிட்டது. அவரிடம் அனிமேஷன் பணியை கொடுத்ததுதான் வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு என்று கூறியுள்ளர்.

Leave a Reply