திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி இன்று தனது 91வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சி.ஐ.டி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 5.30 மணிக்கு கேக் வெட்டிய கருணாநிதி பின்னர் மரக்கன்றை நட்டார். அதன்பின்னர் கோபாலபுரம் வீட்டிற்கு சென்று அங்கேயும் ஒரு கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். திமுக தொண்டர்கள் வரிசையில் நின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவரிடம் ஆசி பெற்றனர்.
பின்னர் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய கருணாநிதி பின்னர் பெரியார் திடலில் உள்ள பெரியார் சமாதிக்கும் அஞ்சலி செலுத்தினார்.
இன்று மாலை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் மாபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.