உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக கடைசி நேரத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. கடந்த போட்டிகளில் ஏற்பட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்று அடுத்த வரும் சுற்றுப்போட்டிகளில் வெற்றி பெறுவோம் என இந்திய அணியின் கேப்டன் சர்தார் சிங் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம், மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடிய போதிலும் 2 ஆட்டங்களிலும் கடைசி நிமிடத்தில் எதிரணியின் அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாமல் வெற்றிவாய்ப்பை இழந்தது.
எனினும், இரு அணிகளுக்கும் எதிராக போட்டிகளில் இந்திய வீரர்களின் செயல்பாடு பாராட்டத்தக்க வகையில் அமைந்ததாக என்று இந்திய அணியின் பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஸ்பெயினுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றிக் கணக்கை துவங்கி விட வேண்டும் என்று இந்திய அணியினர் நேற்று கடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இது குறித்து கேப்டன் சர்தார் சிங் கூறுகையில், “கடந்த 2 ஆட்டங்களிலும் கடைசிக் கட்டத்தில்தான் நாங்கள் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தோம். இது, பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது’ என்றாலும் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. “ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா ஆகிய அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கண்டிப்பாக வரும் போட்டிகளில் வெற்றி பெறுவோம். வெளிப்படுத்த வீரர்கள் உறுதி கொண்டுள்ளனர்’ என்று பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் தெரிவித்தார்.