ஹாலிவுட்டில் ஒரு திரைப்படம் பல பாகங்களாக வருவது சாதாரண விஷயம். ஜுராசிக் பார்க், ஸ்பீடு, ஹாரிபாட்டர், போன்ற படங்களின் வரிசையில் Fast & The Furious என்ற திரைப்படம் ஆறுபாகங்கள் இதுவரை வெளிவந்துள்ளது. இதன் ஏழாவது பாகம் வரும் 2015 ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் பால்வாக்கர் கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் தேதி கார் விபத்தில் மரணம் அடைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் Fast & The Furious படத்தின் அனைத்து பாகங்களையும் இயக்கிய கியக்குனர் இயக்குனர் ராப் கோஹென் மும்பை வந்தார். மும்பையில் நேற்று பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் வீட்டில் அவருக்கு மதிய விருந்து வெகுசிறப்பாக நடந்தது. பின்னர் இரண்டு மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தையில் Fast & The Furious திரைப்படத்தின் 8வது பாகத்தில் ஹிருத்திக் ரோஷன் முக்கிய வேடத்தில் அதாவது பால்வாக்கர் நடித்த வேடத்தில் நடிப்பார் என்று முடிவு செய்யப்பட்டது.
இயக்குனர் ராப் கோஹென், ஹிருத்திக் ரோஷனின் அனைத்து படங்களையும் பார்த்ததாகவும், அவர்து நடிப்பு வெகுசிறப்பாக இருப்பதாகவும் பாராட்டினார்.