பிரதமர் மோடி பயணம் செய்யும் முதல் வெளிநாடு பூடான்.

Bhutanese-PM-Tshering-Tobgay-and-Indian-PM-Narendra-Modi.பிரதமர் பதவியேற்றவுடன் முதல் வெளிநாட்டு பயணமாக பூடான் நாட்டிற்கு செல்ல நரேந்திரமோடி முடிவு செய்துள்ளார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

இம்மாத இறுதியில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி பூடான் நாட்டிற்கு செல்லவிருப்பதாக உறுதியான தகவல்கள் கூறுகின்றன. இந்த பயணத்தின்போது மோடி, பூடான் தலைவர்களுடன் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பூடான் பிரதமர் Tshering Tobgay அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை, பொருளாதார வளர்ச்சி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரதமர் மோடி தனது அடுத்த வெளிநாட்டு பயணமாக பிரேசில் செல்லவிருக்கிறர். ஜூலை மாத மத்தியில் பிரேசிலில் நடக்க இருக்கும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார். பிரிக்ஸ் (BRICS) என்பவது பிரேசில், ரஷ்யா,சீனா, மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டம் ஆகும். இந்த கூட்டத்தில் ஐந்து நாட்டு பிரதமர்களும் கலந்துகொள்கின்றனர்.

Leave a Reply