அஜீத் நடிக்கும் 55 வது திரைப்படத்தை இயக்குனர் கவுதம் மேனன் விறுவிறுப்பாக இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக ஈசிஆர் சாலையில் இரவு நேரங்களில் நடந்து வருகிறது.
அஜீத் மற்றும் அனுஷ்கா நடிக்கும் காட்சிகள் ஈசிஆர் சாலையில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதை இணையத்தில் கசிந்துள்ளது. த்ரிஷா ஈசிஆர் சாலையில் கொல்லப்பட்டுவிடுவதாகவும், அந்த கொலையை அஜீத் மற்றும் அனுஷ்கா துப்பறிவதுதான் கதையின் கரு என கவுதம் மேனனின் உதவியாளர் ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
மீடியாவுக்கு தெரியாமல் ரகசியமாக வைத்திருந்த கதையை வெளியிட்ட உதவி இயக்குனரை படத்தில் இருந்து கவுதம் மேனன் அதிரடியாக நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இந்த படத்தில் அஜீத்,அனுஷ்கா, அருண்விஜய், த்ரிஷா மற்றும் விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் டான் மெக் ஆர்தர் கேமிராமேனாக பணிசெய்து வருகிறார்.
விறுவிறுப்பாக தயாராகி வரும் இந்த படம் வரும் 2015 பொங்கல் திருநாளில் வெளிவரும் என தெரிகிறது.