தனுஷ் – ஆண்ட்ரியா நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம்.

ayirathil oruvan IIஇரண்டாம் உலகம் படத்தின் படுதோல்விக்கு பின்னர் சிம்பு-த்ரிஷா நடிப்பில் இயக்குவதாக இருந்த செல்வராகவன், பின்னர் அந்த படத்தை திடீரென நிறுத்திவிட்டார். தற்போது செல்வராகவனின் அடுத்த படம் என்ன என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று காலை டுவிட்டரில், ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை கூடிய விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய மனதில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தின் கதை ஓடிக்கொண்டே இருப்பதாகவும், அதை நினைவாக்க அடுத்த வருடம் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா,ரீமா சென் ஆகியோர் நடித்திருப்பார்கள்.

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனுஷ்- ஆண்ட்ரியா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ரீமா சென்னுக்கு பதிலாக த்ரிஷா நடிப்பார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் துவங்கும் என்றும் செல்வராகவன் கூறியுள்ளார்.

Leave a Reply