பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுவது சில நேரங்களில் சரியானது செயல்தன் என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவரும் மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சருமான பாபுலால் கவுர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளதால் அவருக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
உத்தரப் பிதேச மாநிலம் பதுவன் கிராமத்தில் கடந்த மாதம் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு தலித் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து, மரத்தில் தூக்கிலிட்டு கொலை செய்த பரபரப்பு அடங்குவதற்குள் இப்படி ஒரு சர்ச்சையான கருத்தை ஒரு உள்துறை அமைச்சரே கூறியிருப்பது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாபுலால் கவுர் நேற்று மத்தியபிரதேச தலைநகரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பாலியல் பலாத்காரம் ஒரு சமூக குற்றம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது சில நேரங்களில் சரியான செயலாகவும் தெரிகிறாது, சிலநேரலங்களில் தவறாகவும் தெரிகிறது. பாலியல் குற்றவாளிகள் அதனை செய்த பின்னர்தான் நமக்கு அந்த செயல் சரியா? தவறா? என்பது தெரிய வருகிறது என்று கூறினார்.
மாநிலத்தின் அமைச்சர் ஒருவரே இவ்வாறு பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாபுலால் கவுரை டிஸ்மிஸ் செய்துவிட்டு அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கண்டனக்குரல்கள் எழுந்து வருகின்றன.