அனுஷ்கா இதுவரை தமிழ், மற்றும் தெலுங்கில் சுமார் 30 படங்களுக்கும் மேல் நடித்து முடித்துவிட்டார். ஆனால் அவர் ஒரு படத்தில் கூட இதுவரை டப்பிங் குரல் கொடுத்ததில்லை. டப்பிங் ஆர்ட்டிஸ்ட்கள் மூலம்தான் அவரது குரல் திரையில் ஒலித்து வந்தது.
இந்நிலையில் அஜீத்துடன் தற்போது நடித்து வரும் அனுஷ்காவிடம் இயக்குனர் கவுதம் மேனன் இந்த படத்திற்கு அனுஷ்காதான் குரல் கொடுக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார். அனுஷ்கா மறுத்தபோதிலும், கவுதம் மேனன் விடாப்பிடியாக அனுஷ்காவிடம் அவருடைய கேரக்டர் குறித்து விளக்கம் கொடுத்து அனுஷ்காவை குரல் கொடுக்க சம்மதம் பெற்றுவிட்டார். அனுஷ்கா சொந்தக்குரலில் டப்பிங் கொடுக்க சம்மதம் தெரிவித்தது குறித்து கேள்விப்பட்ட அஜீத் திருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிக்கும் த்ரிஷாவும் சொந்தக்குரலில் பேச இருக்கிறார். அஜீத், அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடித்து வரும் இந்த பெயர் வைக்கப்படாத படத்தின் படப்பிடிப்பு இரவு பகலாக நடந்து வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மூன்று பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுவிட்டது.