தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைப்பிடிப்பு. 5 ஆயிரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்.

fishermen striketசிங்களப் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களுடைய படகுகளையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அதிரடி முடிவு எடுத்துள்ளனர். இன்று காலை ராமேஸ்வரத்தில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் விசைப்படகு மீனவர்களின் சங்கம் இந்த முடிவை அறிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க  செல்ல மாட்டார்கள் என்றும், நாளை மறுநாள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே மீனவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஒரு விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்களின் கைது நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அவர் பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply