முதல்வரின் கடிதம், மோடியின் உடனடி நடவடிக்கை எதிரொலி: மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க ராஜபக்சே உத்தரவு.

8இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ள தமிழக மீனவர்கள் 78 பேர்களையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று உத்தரவிட்டுள்ளார்.

 நேற்று ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற 87 மீனவர்களையும், 18 படகுகளையும் சிங்கள கடற்படையினர் கைது செய்து இலங்கைக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து இன்று (9ஆம் தேதி) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, அனைத்து மீனவர்களையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கடிதம் எழுதியதை தொடர்ந்து, இந்திய பிரதமர் மோடியின் அறிவுரையின்படி இலங்கை அரசிடம் வெளியுறவு செயலாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எடுக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 78 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டார். இதையடுத்து இந்திய சிறையில் உள்ள 13 இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய இந்திய அரசும் உத்தரவிட்டது.

 இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அதிபர் ராஜபக்சே கூறியிருப்பதாவது: ”நல்லெண்ண நடவடிக்கையாக தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், அதேபோல், இலங்கை மீனவர்களை இந்திய அரசு விடுவித்தை வரவேற்பதாகவும் கூறியுள்ளார். விடுதலை செய்யப்பட்ட 78 மீனவர்களும் நாளை காலை, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. ஆனாலும் மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் விடுவிக்கப்படாததால், ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது.

Leave a Reply