[carousel ids=”35455,35456,35457,35458,35459,35460,35461,35462,35463,35464,35465,35466,35467,35468,35469,35470,35471,35472,35473,35474,35475,35476,35477″]
பிரேசில் நாட்டில் உலகமே எதிர்பார்த்து காத்திருந்த உலகக்கோப்பை கால்பந்தாட்ட திருவிழா நேற்று தொடங்கியது. நேற்று பிரேசில் நாட்டில் உள்ள Arena de Sao Paulo என்ற இடத்தில் நடந்த ஆரம்பவிழாவில் பிரபல ஹாலிவுட் நடிகையும் பாப் பாடகியுமான ஜெனிபர் லோபஸ் படுகவர்ச்சியான உடையில் உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் அதிகாரபூர்வ பாடலை பாடி கோடிக்கணக்கான கால்பந்தாட்ட ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.
பல வண்ண வண்ண கலைநிகழ்ச்சிகளும் ஆரம்பவிழாவில் நடத்தப்பட்டன. நூற்றுக்கணக்கான நடனக்கலைஞர்கள் சுமார் 100 மணி நேரத்திற்கும் மேல் கடுமையான பயிற்சி பெற்ற பின்னர் நேற்றைய ஆரம்ப விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
உலககோப்பை ஆரம்ப விழா நிகழ்ச்சிக்காக மட்டும் சுமார் ரூ.45 கோடி செலவானதாக ஃபிபா தெரிவித்துள்ளது. இந்த ஆரம்பவிழா நிகழ்ச்சிகளை நேரில் சுமார் 68,000 ரசிகர்களும், தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாக கோடிக்கணக்கான ரசிகர்களும் கண்டுகளித்தனர். கடந்த 64 வருட உலக்ககோப்பை ஆரம்பவிழா திருவிழாவில் இந்த விழாதான் பிரமாண்டமானது என ரசிகர்கள் அனைவரும் கருத்து தெரிவித்தனர். உலக்கோப்பை கால்பந்து ஆரம்பவிழா நடன நிகழ்ச்சிகளின் நடன அமைப்பாளராகPaulo Barros அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பவிழா கொண்டாட்டத்திற்கு பின்னர் நடந்த முதல் போட்டியில் பிரேசில் அணி குரோஷியா அணியை 3-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.