இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ வாக விஷால் சிக்கா நியமனம்.

 M_Id_473001_Infosys_Vishal_Sikkaஇன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச்செயலக அதிகாரியாக (CEO) 46 வயதான விஷால் சிக்கா அவர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

வேறு ஒரு நிறுவனத்தில் வேலை செய்த ஒருவர், இன்போசிஸ் நிறுவனத்தில் சி.இ.ஓவாக நியமனம் செய்யப்பட இருப்பது இதுதான் முதல்முறை. விஷால் சிக்கா இதற்கு முன் எஸ்.ஏ.பி. நிறுவனத்தில் வேலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் தலைமை பதவியை ஏற்கவிருக்கும் விஷால், தனது அனுபவம் மற்றும் திறமையால் மீண்டும் இன்போசிஸ் நிறுவனத்தை வெற்றிகரமான நிறுவனமாக மாற்றுவேன் என்று கூறியுள்ளார்.

இன்போசிஸ் நிறுவனத்தின் தற்போதைய சேர்மன் என்.ஆர்.நாராயண மூர்த்தி மற்றும் துணை சேர்மன் எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஜூன் 14-ம் தேதி பதவி விலகுகின்றனர். இருப்பினும் இவர்கள் இருவரும் அக்டோபர் 10ஆம் தேதி வரை இயக்குனர் குழுவில் இடம்பெற்றிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

ஓய்வுக்கு பின்னர் குடும்பம் மற்றும் பேரக்குழந்தைகளுடன் தனது மீதி வாழ்க்கையை செலவிடப்போவதாக நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.

Leave a Reply