மணிரத்னம் இயக்கிய “உயிரே” என்ற படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, பல இந்தி திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் கிங்ஸ் XI பஞ்சாப் கிரிக்கெட் அணியின் உரிமையாளராகவும் உள்ளார். அந்த அணியின் இணை உரிமையாளரும், பிரபல தொழிலதிபருமான நெஸ்வாடியா மீது, ப்ரீத்தி ஜிந்தா, நேற்று மும்பை காவல்நிலையத்தில் திடுக்கிடும் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
கடந்த 30ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையே மும்பையில் நடந்த ஐ.பி.எல் போட்டியின் போது தொழிலதிபர் நெஸ் வாடியா,தன்னிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்ததாக ப்ரீத்தி ஜிந்தா அதிர்ச்சி புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள மும்பை போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். விரைவில் தொழிலதிபர் நெஸ் வாடியா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.