மீண்டும் ஒரு சென்னையில் ஓர் நாள். 13.22 நிமிடங்களில் 14 கி.மீ தூரம் சென்ற இதயம்.

heartsகடந்த 2009ஆம் ஆண்டு ஹிதேந்திரன் என்னும் 15 வயது மாணவன் சாலைவிபத்தில் மூளைச்சாவு அடைந்தபோது, அவனுடைய இதயத்தை தானமாக கொடுக்க அவனது பெற்றோர்கள் முன்வந்தனர். அந்த சமயத்தில் போக்குவரத்தை சரிசெய்து 14 கி.மீ தூரத்தை 13.22 நிமிடங்களில் கடந்து இதயத்தை சரியான நேரத்திற்கு கொண்டு சென்று வெற்றிகரமாக இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதை மையமாக வைத்து தமிழில் சென்னையில் ஓர் நாள் என்ற திரைப்படமும் வெளியானது.

இதே போன்ற ஒரு சம்பவம் இன்று அதே சென்னையில் நடந்துள்ளது. மதுராங்கத்தை சேர்ந்த லோகநாதன் என்னும் இளைஞர் கடந்த 11ஆம் தேதி விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முன்வந்தனர்.

heart4லோகநாதனின் இதயம் அடையாறு மலர் மருத்துவமனியில் உள்ள மும்பையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை, மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர், காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து ஆலோசனை செய்து, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அடையாறு மலர் மருத்துவமனை வரை உள்ள 15 சிக்னல்களையும் ஆம்புலன்ஸுக்காக வழிவிட்டு திறந்துவைக்கப்பட்டன. வெற்றிகரமாக இதயம் 13.22 நிமிடங்களில் மலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மூன்றரை மணி நேரம் இதயமாற்று சர்ஜரி வெற்றிகரமாக நடந்தது.

heart 5இதயம் பொருத்தப்பட்ட பெண் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த போக்குவரத்து போலீஸார், சென்னை காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு டாக்டர்கள் நன்றி கூறினர். இன்று நடந்த மீண்டும் ஒரு சென்னையில் ஓர் நாள் நிகழ்ச்சி குறித்து சென்னை மக்கள் பரபரப்பாக பேசிவருகின்றனர்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1lz60LF” standard=”http://www.youtube.com/v/3uSBgfWoHk8?fs=1″ vars=”ytid=3uSBgfWoHk8&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep1180″ /]

Leave a Reply