பிரிட்டன் குட்டி இளவரசர் ஜார்ஜ் முதலாவது பிறந்தநாள். சிறப்பு நாணயம் வெளியிட முடிவு.

6aa      பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த வில்லியம்ஸ் – கேத் மிடில்டன் தம்பதிகளுக்கு கடந்த வருடம் ஜூலை 23ஆம் தேதி பிறந்த குட்டி இளவரசர்தான் ஜார்ஜ். இவருடைய முதலாவதை பிறந்த நாளை வரும் ஜூலை 22ஆம் தேதி பிரிட்டன் நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாட இருக்கின்றது.

பிரிட்டன் அரசு குட்டி இளவரசர் ஜார்ஜ் பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றை வெளியிட உள்ளது. 5 பவுண்ட் மதிப்புள்ள இந்த வெள்ளி நாணயத்தை பிரிட்டன் ராணி எலிசபெத் அவர்கள் வெளியிட உள்ளார்.

6aஜூலை 22ஆம் தேதி வெளியிட இருக்கும் இந்த நாணயத்தின் மாதிரியை நேற்று பிரிட்டன் அரசு பத்திரிகைகளுக்கு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் நேற்று குட்டி இளவரசர ஜார்ஜ், முதன்முதலாக தனது தந்தை வில்லியம்ஸுடன் கால்பந்து விளையாடினார். இந்த அரிய காட்சியை லண்டன் போட்டோகிராபர்கள் புகைப்படம் எடுத்து பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளனர்.

[carousel ids=”35692,35691,35690,35689,35688,35687,35686,35684″]

Leave a Reply