ஓட்டு போட்டவர்களின் விரல்களை வெட்டி தண்டனை கொடுத்த தலிபான்கள். ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்.

 

6ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 14ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. பெருவாரியான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்த தேர்தலை புறக்கணிக்கும்படி தாலிபான் தீவிரவாதிகள் பொதுமக்களை மிரட்டி வந்தனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தேர்தலில் தங்கள் எச்சரிக்கையையும் மீறி வாக்களித்த 11 பேர்களை கடத்தி சென்று அவர்கள் கையில் மை இருந்த விரல்களை வெட்டி தலிபான்கள் தண்டனை கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதனால் ஆப்கானிஸ்தான் மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் “தேர்தலில் வாக்களித்தவர்களை கடத்தி சென்று விரல்களை வெட்டிய தலிபான் தீவிரவாதிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு தீவிரவாதிகளை தேடி வருகிறொம். இதுபோன்ற தீவிரவாத செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க ஆப்கன் அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply