[carousel ids=”35885,35886,35887,35888,35889,35890″]
பிரேசில் நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்றைய விறுவிறுப்பான ஆட்டத்தில் கொலம்பியா அணி ஐவரிகோஸ்ட் அணியை 2-1 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ‘சி’ லீக் அணியில் இடம்பெற்றுள்ள கொலம்பியா மற்றும் ஐவரி கோஸ்ட் அணிகள் நேற்று கடும் ஆக்ரோஷத்துடன் மோதின. இரு அணிகளும் கடுமையாக முயற்சி செய்தும் ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் கோல் போடவில்லை.
அதனால் 2வது பாதி ஆட்டம் பயங்கர பரபரப்புடன் நடந்தது.. 64வது நிமிடத்தில் ‘கார்னர்’ பகுதியில் இருந்து கடத்தப்பட்ட பந்தை கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகஸ் என்ற வீரர் மிக அபாரமாக தனது தலையால் முட்டி மிக அற்புத கோலாக மாற்றினார். இதே உற்சாகத்தில் அடுத்த சில நிமிடங்களில் கொலம்பியா வீரர் ஜூவான் குயின்டெரோ ஒரு கோல் போட்டு ஐவரி கோஸ்ட் அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார்.
இரண்டு கோல்கள் வாங்கிய அதிர்ச்சியுடன் களத்தில் வேகம் காட்டிய ஐவரி கோஸ்ட் அணியின் ஜெர்வினோ , 73வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டதால் அந்த அணி சிறிது நம்பிக்கையை பெற்றது.
இதன்பின்னர் இரு அணிகளும் கோல்கள் எதுவும் போடாததால் கொலம்பிய அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.