ஈராக்கில் ஏற்பட்டுள்ள தீவிரவாதிகளின் பிரச்சனையால் இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
மும்பையில் இந்திய வணிகர்கள் சங்கத்தின் ஆண்டுவிழா கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, ஈராக் பிரச்சனையால் இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையும் என்றும், இந்த பிரச்சனையை உடனடியாக மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சார்ந்து வாழும் இன்றைய சூழலில் ஈராக் பிரச்சனையை வெளிநாட்டு பிரச்சனை என்று கூறி அதில் கவனம் செலுத்தாமல் இருக்க முடியாது என்றும் முகேஷ் அம்பானி மேலும் கூறினார்.