பயணிகள் ரயில் கட்டணம் திடீர் உயர்வு. ஜெயலலிதா உள்பட தலைவர்கள் கண்டனம்

7பாரதிய ஜனதா ஆட்சி ஏற்றவுடன் விலைவாசிகள் குறையும் என எதிர்பார்த்திருந்த நிலையில் பயணிகள் ரயில் கட்டணம் மற்றும் சரக்கு ரயில் கட்டணம் ஆகியவைகளை உயர்த்த முடிவு செய்திருப்பதாக ரயில்வே துறை அறிவிப்பு செய்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வரும் புதன்கிழமை முதல் பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்குக் கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த கட்டண உயர்வு குறித்து விளக்கம் அளித்த ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா “இந்த கட்டண உயர்வு முந்தைய ஆட்சி காலத்திலேயே உயர்த்தப்பட்டதுதான். தேர்தல் விதிமுறைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த கட்டண உயர்வை தற்போது அமல்படுத்தியிருக்கின்றோம். இதனால் இந்த கட்டண உயர்வுக்கும் புதிய அரசுக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.

ஆதார் அட்டை திட்டம் உள்பட முந்தைய ஆட்சியின் பல திட்டங்களை ரத்து செய்த புதிய மத்திய அரசு, முந்தைய ஆட்சியின் கட்டண உயர்வை மட்டும் அமல்படுத்துவது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி கேட்டுள்ளதால் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வின் மூலம், ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

train fare

Leave a Reply