ரயில் கட்டண உயர்வை கண்டித்து டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம் செய்யும் போராட்டம்.

youth-congress-activists-block-trains-at-aluva-stationமத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, வரும் புதன்கிழமை முடஹ்ல் பயணிகள் ரயில் கட்டணம் 14.5 சதவிகிதம் வரை உயரும் என அறிவித்துள்ளதால் கட்டண உயர்வை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி டெல்லியில் நூதன போராட்டம் ஒன்றை துவங்கியுள்ளது. : ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதுதான் அந்த நூதன போராட்டம். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மாணிக்ராவ் தாக்கரே நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, “‘ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் ரயில் கட்டண உயர்வை எதிர்த்து, நானும் எங்களது கட்சி தொண்டர்களும் நாளை மும்பை சத்திரபதி சிவாஜி நிலையத்தில் இருந்து தானேவுக்கு டிக்கெட் எடுக்காமல் நூற்றுக்கணக்கானோர் ரயில் பயணம் மேற்கொள்ள உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்த போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் கலந்துகொள்வார்கள் என அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply