உலகக்கோப்பை கால்பந்து போட்டி. பெல்ஜியம் அணி த்ரில் வெற்றி.

[carousel ids=”36039,36040,36041,36042″]

பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணி கடைசி நேரத்தில் த்ரில் கோல் போட்டு ரஷ்ய அணியை தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் பெல்ஜியம் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் H பிரிவில் உள்ள பெல்ஜியம் அணி ரஷ்ய அணியுடன் மோதியது. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் கோல் போட எடுத்த முயற்சிகள் கோல்கீப்பர்களால் தடுக்கப்படவே இரு அணிகளும் கோல்கள் எதுவும் போடமுடியாமல் திணறி வந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் இரு அணிகளுக்கும் அடுத்த சுற்றில் தகுதி பெற வாய்பு இருந்ததால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடியது.

இந்நிலையில் பெல்ஜியம் அணியில் மாற்று வீரராக களமிறக்கப்பட்ட டிவோக் ஒரிகி கடைசி நேரத்தில் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆட்டம் முடிய கடைசி இரண்டு நிமிடங்கள் இருந்தபோது அவர் இந்த கோலை போட்டதால் பெல்ஜியம் அணி அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் போர்ச்சுக்கல் அணிகளுக்கு இடையே நடந்த மற்றொரு போட்டி டிராவில் முடிந்தது.

Leave a Reply