மோடியின் தாயாரை கடத்துவோம். ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த வாலிபர்.

modi motherஉத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஃபேஸ்புக்கில், பிரதமர் மோடியின் தாயாரை கடத்துவோம் என மிரட்டல் விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மிரட்டல் காரணமாக மோடியின் தாயார் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் இன்சமாம் கத்ரி என்ற பெயரில் இருந்த பேஸ்புக் பக்கத்தில் நேற்று “மோடியின் தாயாரை நாங்கள் கடத்தினால், அவர் நாங்கள் கூறும் எதனையும் செய்வார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தகவல் வெளியானவுடன் உத்தரபிரதேச போலீஸார், குஜராத் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக குஜராத்தில் இருந்த மோடியின் தாயார் வீட்டுக்கு பலத்த காவல் போடப்பட்டுள்ளது.

பிரதமரின் தாயாரை கடத்துவதாக அறிவித்திருந்த கருத்துக்கு ஏராளமானோர் கடும் கண்டனத்தை பேஸ்புக்கில் தெரிவித்திருந்தனர். உடனடியாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு அந்த கருத்து நீக்கப்பட்டது. இதுகுறித்து உத்தரபிரதேச போலீஸாரும், உளவுப்பிரிவு மற்றும் உள்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து யாரும் இதுவரை கைது செய்யப்பட்டார்களா? என்பது குறித்த தகவல்களை போலீஸார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

Leave a Reply