பிரபல தமிழ் நடிகர் சத்யராஜின் தங்கை போலி கையெழுத்து போட்டு தனது விலைமதிப்புள்ள காரை அபகரிப்பு விட்டதாக அவரது கணவரே போலீஸில் புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை சத்யராஜின் தங்கை கல்பனா, தனது கணவர் அர்ஜூன் மன்றாடியாருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்து தனியாக குன்னூர் பகுதியில் வாழ்ந்து வருகிறார். இருவரும் சட்டப்படி பிரிந்துவிட விவாகரத்து வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் தனது பெயரில் இருந்த மகேந்திரா பொலிரோ என்ற வாகனத்தை தனது மனைவி டிரைவரின் உதவியால் போலி கையெழுத்து போட்டி அவரது பெயருக்கு மாற்றி, மோசடி செய்துள்ளதாக அவரது கணவர் அர்ஜூன் மன்றாடியார் நேற்று ஊட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து ஊட்டி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.