பாலிவுட்டில் முன்னணி நடிகர் அமீர்கான் நேற்று பிரதமர் நரேந்திரமோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது சமூக பிரச்சனைகளில் குறித்து அலசும் தனது சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி குறித்து பிரதமரிடம் விவாதித்ததாக அவர் கூறினார்.
இதுகுறித்து அமீர்கான் தனது டுவிட்டரில் விடுத்த செய்தியில், பிரதமர் மோடியின் பொன்னான நேரத்தை என்னை சந்திப்பதற்காக ஒதுக்கியதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தனது மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மத்தியில் மாபெரும் ஆதரவு கிடைத்திருப்பது குறித்து பிரதமரிடம் கலந்து ஆலோசித்ததாகவும், , தனது நிகழ்ச்சிகளில் பேசப்பட்ட பிரச்னைகள் குறித்தும் இருவரும் விவாதித்ததாக கூறியுள்ளார்.
சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில் தனது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும், சத்யமேவ ஜெயதேவ் நிகழ்ச்சி மென்மேலும் வெற்றி பெற தான் வாழ்த்துவதாக பிரதமர் கூறியதாகவும் அமீர்கான் கூறியுளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இச்சந்திப்பு முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டுள்ளது.