காரைக்குடியில் நடந்த நமீதா நிகழ்ச்சியில் பயங்கர கலவரம். போலீஸ் தடியடி

namitha-kapoorகடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காரைக்குடியில் நமீதாவின் நடன நிகழ்ச்சியுடன்கூடிய உங்களில் யார் லாரன்ஸ்? என்ற நிகழ்ச்சியை நடத்த அந்த பகுதியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக நமீதாவுக்கு பல லட்சங்கள் கொடுத்து அவருக்கு அழைப்பு விடுத்தனர். நமீதாவும் கண்டிப்பாக விழாவுக்கு வந்து நடனம் ஆடுவதாக ஒப்புக்கொண்டார்.

அதனால் இந்த நிகழ்ச்சிக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை டிக்கெட் வசூல் செய்யப்பட்டது. நமீதாவின் ஆட்டத்தை நேரில் கண்டுகளிக்க பலர் ரூ.500 வரை கொடுத்து டிக்கெட் வாங்கினர். ஆனால் நிகழ்ச்சி நடந்த அன்று, நமீதாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் வரமுடியவில்லை என்று தகவல் கொடுத்துள்ளார்.

இந்த தகவலை விழாக்குழுவினர் வெளியே சொல்லாமல் நமீதா இதோ இப்பொழுது வந்துவிடுவார் என்று கூறி நேரத்தை கடத்திக்கொண்டே வந்தனர். இறுதியில் நமீதா வரமாட்டார் என்பதை அறிந்தவுடன் ரசிகர்கள் கடும்கோபம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். நாற்காலி, மேஜை மற்றும் விழா மேடையையும் அடித்து நொறுக்கி பெரும் கலவரத்தில் ஈடுபட்டதால் உடனடியாக போலீஸார் வரவழைக்கப்பட்டனர். போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த கலவரம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்துகூட 1 மணி நேரம் பாதிக்கப்பட்டதாம்.

பணம் வாங்கிக்கொண்டு சொல்லியபடி நமீதா வராததால்தான் இந்த கலவரம் நடந்தததாகவும், அதனால் நமீதா மீது வழக்குப்பதிவு செய்யவுள்ளதாகவும் விழாக்குழுவினர் கூறுகின்றனர்.

Leave a Reply