50 வகை நோய்களுக்கு இலவச மருந்துகள். நாடு முழுவது வழங்க மத்திய அரசு திட்டம்.

4சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்பட பலவகையான நோய்களுக்கான மருந்துகளை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்க மத்திய அரசு அதிரடி திட்டம் ஒன்றை விரைவில் கொண்டுவர உள்ளது. சுமார் 50 வகையான நோய்களுக்கு பொதுமக்கள் இலவசமாக மருந்து மற்றும் மாத்திரைகளை அரசு மருத்துவமனையில் பெற்றுக்கொள்ளலாம்.

தற்போதுள்ள சூழ்நிலையில் பொதுமக்களுக்கு சுமார் 75 வகையான மருந்துகள் அதிகமாக தேவைப்படுவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 50 வகையான மருந்துகளை நாடு முழுவதும் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்த 50 மருந்துகளை தேர்வு செய்வதற்காக, மருந்துகள் குறித்த அறிவியல் ஆய்வில் புகழ்பெற்ற கல்வியாளரும், பேராசியருமான ரஞ்சத் ராய் சவுத்ரி தலைமையில் ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச மருந்துகளை ஒரே முயற்சியாக செயல்படுத்த முடியாது எனினும் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு சில மருந்துகளை இலவசமாக கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply