சல்மான்கான் கார் விபத்து வழக்கில் சாட்சி கூறிய ஒருவர் நேற்று திடீரென பல்டி அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுல்.
பாலிவுட் நடிகர் சல்மான்கான் கடந்த 2002ஆம் ஆண்டு ந்ள்ளிரவில் மும்பை பாந்திரா பகுதியில் வேகமாக காரில் சென்றுகொண்டிருந்தபோது அந்த கார், நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களின் மீது ஏறியதால் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு கடந்த 12 வருடங்களாக மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று நீதிபதி தேஷ்பாண்டே முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நேற்று விபத்து நடந்த இடத்திற்கு வெளியே உள்ள ஓட்டல் ஒன்றின் செக்யூரிட்டி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி அளித்தார். அவர் தான் ஏற்கனவே அளித்த சாட்சியம் தவறானது என்றும், சல்மான்கான் கார் மோதியதை தான் பார்க்கவில்லை என்றும், ஒரு பெரிய வெள்ளை நிற கார் மோதியதைத்தான் தான் பார்த்ததாகவும், அதில் சல்மான்கான் இருந்தாரா? என்பது தனக்கு தெரியாது என்றும் கூறி திடீர் பல்டி அடித்தார்.
இதேபோல் கார் மோதி பலத்த காயம் அடைந்த ஒருவரும் தான் கூறிய சாட்சியில் இருந்து பல்டி அடித்துள்ளார். இதனால் இந்த வழக்கு சல்மான்கானுக்கு சாதகமாக முடியும் நிலையில் உள்ளது.