நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்றுவிடலாம் என கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி மாறி மோடி பொறுப்பேற்றதும், ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப்படுமா? அல்லது தொடர்ந்து அரசே நடத்துமா? என்பது குறித்த கேள்வி எழுந்தது.
நேற்று பிரதமர் மோடியை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு சந்தித்து இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர், “ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்திறன் போதுமானதாக இல்லாதிருப்பினும், அதை தனியாருக்கு மாற்றும் எண்ணம் மத்திய அரசுக்கு தற்போதைக்கு இல்லை என்றும், ஒருசில மாற்றங்கள் கொண்டு நஷ்டத்தில் இயங்கிவரும் நிறுவனத்தை லாபத்தை நோக்கி செல்ல தேவையான அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் விமான எரிபொருள் மீதான விற்பனை வரி மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே இந்த வரியை குறைப்பது தொடர்பாக மாநில அரசுகளுடன் கலந்து பேசுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.