சீனப்பெண்ணை மணந்த புதுக்கோட்டை பொறியாளர். தமிழ் கலாச்சாரப்படி தாலி கட்டினார்.

wed_lock

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர், சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து தமிழ் கலாச்சார வழக்கப்படி புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று திருமணம் செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மச்சுவாடிப் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் கிருஷ்ணமூர்த்தி.  சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வரும் கிருஷ்ணமூர்த்தி தன்னுடன் பணியாற்றிய சீன இளம்பெண்  ஜூமிங்க் என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். பெண்ணின் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதை தொடர்ந்து இவர்களுடைய திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களுடைய திருமணம் நேற்று இருவீட்டாரின் முன்னிலையில் புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் இந்து மத முறைப்படி ஜூமிங்க்-கிருஷ்ணமூர்த்தி திருமணம் நடைபெற்றது. சீனப்பெண் கழுத்தில் கிருஷ்ணமூர்த்தி தாலி கட்டினார்.திருமண வரவேற்பு நிகழ்ச்சி அடுத்த வாரம் சிங்கப்பூரில் நடைபெறும் என்று அவரது உறவினர்கள் கூறினர். சீனப்பெண்ணை தமிழ் இளைஞர் திருமணம் செய்துகொண்டதை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Leave a Reply