உலக அளவில் 4வது இடத்தை பிடித்த மோடி. ஒபாமா அதிர்ச்சி

Modi Twitter on June 26சமூக வலைத்தளங்களின் மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை கூறி வரும் முதல் பிரதமர் மோடி என்றே கூறலாம். அவர் குஜராத் முதல்வராக இருந்தபோதே ஃபேஸ்புக், டுவிட்டர் இரண்டையும் மிகச்சரியாக  பயன்படுத்திய தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவரை லட்சக்கணக்கனோர் ஃபாலோ செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய நிலவரப்படி அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ டுவிட்டர் ஆதரவாளர்களை விட நரேந்திரமோடியின் ஆதரவாளர்கள் அதிகமாகியுள்ளனர். இதுவரை இந்தியாவில் யாரும் செய்யாத மாபெரும் சாதனை என்றே கூறப்படுகிறது.

டுவிட்டரை பொருத்தவரை நரேந்திரமோடி உலக அளவில் 4வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இரண்டாவது இடத்தில் போப்பாண்டவர், மூன்றாவது இடத்தில் இந்தோனேஷிய அதிபர் சுசிலோ பாம்பாங் ஆகியோர் உள்ளனர். இன்னும் சில நாட்களில் மோடி முதலிடத்தை பிடிப்பார் என கூறப்படுகிறது. இதனால் ஒபாமா அதிர்ச்சியில் உள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply