[carousel ids=”36271,36272,36273,36274,36275″]
இங்கிலாந்தில் 68 ஆண்டுகளாக இணைபிரியாமல் ஒற்றுமையாக வாழ்ந்த ஒரு தம்பதியினர் 10 மணிநேர இடைவெளியில் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். வாழ்வில் மட்டுமின்றி மரணத்திலும் இணைபிரியாத இந்த அபூர்வ ஜோடியின் மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் ஒருபுறம் வருத்தத்தில் இருந்தாலும், இன்னொரு வகையில் பெருமையாக பேசி வருகின்றனர்.
இங்கிலாந்தில் உள்ள டேம்சைடு என்ற நகரில் ஜார்ஜ் டவுட்டி என்பவரும் அவருடைய மனைவி டொரோத்தி என்பவரும் திருமணமாகி 68 வருடங்களாக இணைபிரியாமல் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். நேற்று 91வயதான ஜார்ஜ் டவுட்டி இருதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கணவரின் உடல்நிலை குறித்து கவலைப்பட்ட அவருடைய மனைவி டொரோத்தி மருத்துவமனையில் கணவரை படுக்கையில் பார்த்த அடுத்த நிமிடமே மாரடைப்பு வந்து மரணம் அடைந்தார். மனைவி மரணம் அடைந்ததே தெரியாமல் சிகிச்சை பெற்று வந்த ஜார்ஜ் டவுட்டி, 10 மணிநேரம் கழித்து சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார்.
அடுத்தடுத்த 10 மணி நேர இடைவெளியில் தம்பதிகள் மரணம் அடைந்ததால் அவர்களுடைய குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வாழ்வில் ஒற்றுமையாக இருந்த அவர்கள் சாவிலும் இணைபிரியாமல் இருந்ததை எண்ணி ஒருபுறம் பெருமையும் அடைந்தனர். இருவருக்கும் அருகருகே கல்லறை ஏற்பாடு செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.