மத்திய அரசு நிறுவனமான ‘கெயில்’ நாடு முழுவதும் பூமிக்கு அடியில் குழாய்கள் பதித்து அதன் மூலம் இயற்கை எரிவாயுவை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு சென்று விநியோகம் செய்கிறது.
இந்நிறுவனத்தின் இயற்கை எரிவாயு பைப் லைன் ஒன்று ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் நாகாராம் என்ற கிராமம் வழியாக செல்கிறது. அந்த கிராமத்தில் குடியிருப்பு பகுதிகள் நிறைந்த வீடுகளின் நடுவே கியாஸ் குழாய்கள் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டு உள்ளது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1qMZWm0″ standard=”http://www.youtube.com/v/tdVG53XaEgM?fs=1″ vars=”ytid=tdVG53XaEgM&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep4676″ /]
இன்று அதிகாலை சுமார் 5.30 மணிக்கு அந்த பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் இயற்கை எரிவாயு குழாயில் அதிக அழுத்தம் ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் பயங்கரமாக தீப்பற்றி எரிந்தது. கியாஸ் என்பதால் தீ மளமளவென்று பரவி கிராமத்தில் இருந்த வீடுகளிலும் பற்றிக்கொண்டது.
அந்த நேரத்தில் இந்த விபரீதம் தெரியாமல் வீட்டிற்குள் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த மக்களில் பலர் இந்த தீயில் சிக்கிக் கொண்டனர். ஆண்கள் மட்டும் உயிருக்கு பயந்து தப்பி ஓடிவிட்டனர். ஆனால் விரைவாக ஓடமுடியாத பெண்களும், குழந்தைகளும் தீயில் சிக்கிக் கொண்டனர்.
இந்த கோர விபத்தில் பெண்கள், குழந்தைகள் 15 பேர் உடல் கருகி பலியானார்கள். 25–க்கும் மேற்பட்டவர்கள் பலத்த தீக்காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கெயில் நிறுவன ஊழியர்கள் விரைந்து சென்று அந்த கிராமம் வழியாக செல்லும் கியாஸ் இணைப்பை உடனடியாக துண்டித்தனர். இதனால் தீ ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் தீயணைப்பு படையினர் பலமணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்துள்ளனர்.
டெல்லி சென்றிருந்த சீமாந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல் கிடைத்தவுடன் உடனே டெல்லியில் இருந்து ஐதராபாத் திரும்பி, தீவிபத்து நடந்த கிராமத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் இந்த தீவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்க முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.