மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி வீழ்ந்து மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் பல மாநிலங்களின் கவர்னர் பதவிக்கு ஆபத்து வந்தது. உ.பி, மாநில கவர்னர் உள்பட ஒருசில மாநில கவர்னர்கள் தாங்களாகவே முன்வந்து ராஜினாமா செய்தனர். மேலும் சில மாநில கவர்னர்களை ராஜினாமா செய்யக்கோரி மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழக கவர்னர் ரோசய்யாவுக்கு கர்நாடக கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக வழங்கி இன்று குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக கவர்னரின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைவதால் தமிழக கவர்னர் ரோசய்யாவுக்கு இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தமிழக கவர்னராக இருக்கும் ரோசய்யா, நாளை முதல் கூடுதலாக கர்நாடக கவர்னர் பொறுப்பையும் சேர்த்து பார்த்துக்கொள்வார்.