[carousel ids=”36468,36469,36470,36471,36472,36473,36474,36475,36476,36477″]
பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதிக்கு தகுதி பெறும் 16 சுற்று போட்டியில் நேற்று நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.
மெக்ஸிகோ அணியுடன் நேற்று இரவு மோதிய நெதர்லாந்து அணி கடைசி நேரத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பினை பயன்படுத்தி அபார வெற்றியை பெற்றது.
இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. முதல்பாதியில் இரு அணி வீரர்களும் கோல் போட கடுமையாக முயற்சி செய்தபோதிலும் எந்த அணியும் கோல் போடவில்லை.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்தில் மெக்ஸிகோ வீரர் சன்டோஸ் முதல்கோலை அடித்து, தமது அணி வெற்றி பெற வாய்ப்பை ஏற்படுத்தினார். இதற்கு பதிலடியாக ஆட்டத்தின் கடைசி நேரத்தில் அதாவது 88வது நிமிடத்தில் மெக்சிகொ அணியின் ஸ்னைடெர் பதில் கோல் அடித்து சமன் செய்தார்.
இரு அணிகளும் சமமாக ஒரு கோல் அடித்திருந்ததால், கூடுதல் நேரம் வழங்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் போட்டியில் திடீரென ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஸ்டாபேஜ் நேரத்தில் கோல் கம்பம் அருகே நெதர்லாந்து வீரர் ராபனை, மெக்ஸிகோ கேப்டன் மார்க்யூஷ் இடைமறித்தாக குற்றச்சாட்டு கூறப்பட்டதால் நெதர்லாந்து அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. பெனால்டி கிக் வாய்ப்பை அருமையக பயன்படுத்தி எளிதில் கோல் அடித்தார் நெதர்லாந்து வீஅர் ஹுண்டெலார்.
இதனால் ஆட்டநேர இறுதியில் நெதர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கடைசி நேரத்தில் செய்த சிறு தவறால் நெதர்லாந்து அணி போட்டியில் இருந்து வெளியேறியது.