தென்னாப்பிரிக்காவில் பழங்குடியினர் வாழும் ஒருசில பகுதிகளில் இன்னும் பெண்களை பரிசாக கொடுக்கும் பழக்கம் இருந்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள பெண்கள் அமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இந்த பழக்கம் அங்கு நிற்பதாக இல்லை.
கடந்த சில தினங் களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் உள்ள தொகோயாண்டோ என்ற ஊரில் நடந்த திருவிழா SABA (South African Broadcasting Corporation) என்ற தென் ஆப்பிரிக்காவின் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஹலாடி மோட்சோனெங் என்பவர் தனது 22 வயது மனைவியை பழமை வாதிகளின் தலைவர்களுக்கு பரிசாக கொடுத்துள்ளார். மனைவியோடு சேர்த்து பசுவையும், கன்றையும் அவர் வழங்கியுள்ளார்.
இந்த தகவல் கேள்விப்பட்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால் தென்னாப்பிரிக்க அரசு மனைவியை பரிசாக கொடுத்த அதிகாரி மீதும், பரிசு பெற்ற பழமைவாதிகளின் தலைவர் மீது விசாரணை நடத்த சிறப்பு விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்துள்ளது. மேலும் பழமைவாதியின் மதகுரு பதவியும் பறிபோகும் நிலையில் உள்ளது.