சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் பிரபல ரவுடி வெட்டி கொலை. பெரும் பதட்டம்.

rowdyசென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கொலை,கொள்ளை மற்றும் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பொக்கை ரவி என்ற பிரபல ரவுடி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று ரவுடி ரவியை நலம் விசாரிப்பது போல அங்கு புகுந்த 9 பேர் கொண்ட கும்பல் திடீரென அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். சம்பவம் நடந்த நேரத்தில் ரவியுடன் மருத்துவமனையில் இருந்த அவருடைய உறவினர்கள் சாந்தகுமார் மற்றும் தமிழரசனையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொலீஸார் வாக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply