உலகக்கோப்பை கால்பந்து: அல்ஜீரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது ஜெர்மனி.

[carousel ids=”36548,36549,36550,36551,36552″]

பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் அல்ஜீரிய அணிக்கு எதிரான போட்டியில் ஜெர்மனி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஜெர்மனி அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற பலமான ஜெர்மனி அணியுடன், முதன் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அல்ஜீரிய அணி நேற்று மோதியது. இந்த ஆட்டத்தில் பெரும்பாலான நேரம் ஜெர்மனி அணி பந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஆனாலும் ஜெர்மனி அணி 16 முறை கோல் அடிக்க முயன்றபோதிலும், அதை மிக லாவகமாக கோல்கீப்பர் மற்றும் அல்ஜீரியா வீரர்கள் தடுத்து கோல் விழாமல் பார்த்துக்கொண்டனர்.

இதனால் ஆட்டம் முடிவடையும் வரை இருஅணிகளும் கோல்கள் எதுவும் போடவில்லை. அல்ஜீரியா அணி கோல் போடுவதற்கு செய்யும் முயற்சியை விட ஜெர்மனி அணியின் கோல்களை தடுப்பதிலேயே குறியாய் இருந்தனர். இந்நிலையில் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்த கூடுதல் நேரத்தில் தாமஸ் முல்லர் அடித்த பந்தை, மிக அபாரமான வகையில் முன்கள ஆட்டக்காரர் ஆண்ட்ரே அற்புதமாக கோல் அடித்து ஜெர்மனியின் வெற்றியை உறுதி செய்தார். அதன்பின்னர் ஆட்டம் முடிய சில நொடிகள் இருந்த நிலையில் நடுக்கள ஆட்டக்காரர் மசூத் ஒஸில் மற்றொரு கோல் அடித்தார்.

ஆனால் இதற்கு பதிலடியாக அல்ஜீரிய வீரர் ஜாபோவ் சில நிமிடங்களில் கோல் அடிக்க, அல்ஜீரிய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனாலும் ஆட்டம் நேரம் முடிந்துவிடவே 2-1 என்ற கணக்கில் ஜெர்மனி அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஜெர்மனி அணி காலிறுதியில் பிரான்ஸ் அணியுடன் வரும் 4ஆம் தேதி மோதுகிறது.

Leave a Reply