[carousel ids=”36603,36604,36605,36606,36607,36608,36609,36610,36611,36612″]
சென்னை போரூர் அருகே முகலிவாக்கம் என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டடம் கடந்த சனிக்கிழமை இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட பயங்கர விபத்தில் அந்த கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த 100க்கும் மேலான கட்டிட தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
மீட்பு பணிகள் உடனடியாக தொடங்கி தொடர்ந்து 5வது நாளாக இன்றும் நடந்து வருகிறது. இந்த விபத்தில் இதுவரை 27 பேர்கள் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் 11 பேர்கள் என்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 5 பேர்கள் என்றும் கூறப்படுகிறது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 5 தொழிலாளர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்புப்பணியின்போது மீட்கப்பட்ட 21 சடலங்கள் அதிகளவு சிதைந்து இருப்பதால் அவர்களீன் அடையாளம் தெரியாமல் உள்ளது. மேலும் நேற்று மாலை முதல் கட்டட இடிபாடுகளில் இருந்து துர்நாற்றம் வீசியதால் இடிபாடுகளுக்குள் மேலும் பல சடலங்கள் இருக்கலாம் அச்சப்படுகிறது. இடிபாடுகளில் கிருமி நாசினி தூவப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தமிழக அரசின் சுகாதாரத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தொற்று நோய் ஏற்படாமல் இருக்க சுமார் 700 பேருக்கு தொற்று நோய் தடுப்பு ஊசி போட்டு வருகின்றனர்.